Monday 2 August 2021

பாடைச் சுழி. - மதன் ராமலிங்கம்.

 
பாடைச் சுழி.

மதன் ராமலிங்கம்.

 

அதிகாலை 4.45. போன் அடித்தது. முதலில் அலாரம் அடிக்கிறதென்று நினைத்து கட் செய்துவிட்டு மீண்டும்  தூக்கத்தைத் தொடர்ந்தேன். அடுத்தமுறை சத்தம் கேட்டு என் இல்லக்கிழத்திதான் இடித்துறைத்துச் சொன்னாள் " போன் அடிக்குது பாருங்கஎன் ரிங்டோன் வோ. இந்தக் கத்து கத்துது. "

 

போனை எடுத்து சைலண்ட் மோடில் போட்டுவிட்டு நெம்பரைப் பார்த்தேன். புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. இந்நேரத்திற்கு போன் வருகிறது என்றால் அது நிச்சயமாக ஊரிலிருந்து இறப்புச் செய்தியாகத்தான் இருக்கும். யாராக இருக்கும் ... யோசித்தேன். அட கருமமே  காலையில் இதென்ன இப்படியொரு வேலை. கட்டிலிலிருந்து எழுந்தேன். மீண்டும் ணியடித்தது. அதே எண்ணிலிருந்துதான்பேசினேன் என்று சொல்லிவிடமுடியாது ஒற்றை வார்த்தையில்  பேசிவிட்டு வைத்தேன்.

 

தலை கிறு கிறுவென்றது .இப்போது என்ன செய்வது. சாவுக்குப் போவதா வேண்டாமா? செத்துப் போனவரின் மகனே தகவலைச் சொன்னபிறகு போகமல் எப்படி இருப்பதுஅமைதியாக குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தேன். வேறு யாரிடமாவது கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாமா? வேண்டாம். தன் அப்பன் செத்துப்போதாக எந்த மகன்  சொல்வான். அப்படியென்றால் உன்மையாகவே சுப்பு மாமா செத்துப்போய் விட்டாறா. வேறொரு நபராக இருந்தால்  ' நீ ண்ணினதுக்கு இப்பவாவது ஆண்டவன் தண்டனயக் குடுத்துட்டாம் பாத்தியாஎன்று கரித்துக் கொட்டியிருக்கலாம். தனக்குப்  பிடிக்காத, தன் வாழ்விலிருந்து ஒதுக்கிவைத்த ஒரு மனிதனின் மரணத்துக்காக நான் ஏன் துக்கப்படுகிறேன்

 

பாத்ரூமிலிருந்து வந்த என் இல்லக்கிழத்தி "என்னவாம். வழக்கம் போலவே வு செய்திதானா. செத்தது யாராம். "

 

சொன்னேன்.

 

" இங்க பாருங்க எனக்கு ஆன்லைன் கிளாஸ் இருக்கு. பையனுக்கும் இருக்கு. பத்தாததுக்கு இந்த கொரானா காலத்துல அங்கயெல்லாம் வரமுடியாது. வரவும் சொல்லாதீங்க ஆமா. " 

 

" இப்ப என்ன நீ வரல அவ்வளவுதானே. விடு அதுக்கெதுக்கு  பொரிப் பொரியறே "

 

" ஆங் உங்க குடும்பத்துக்கு அவங்க செஞ்சதுக்கு நீங்க வேணா நானங்கெட்டுப் போய் நிக்கலாம். நானெதுக்கு வரோணும்னேன். "


ஒரு அதட்டு, அதட்டி விட்டு சதீஷை அழைத்தேன். நீண்ட கத்திருப்புக்குப் பிறகு எடுத்தான்.

 

‘’ ஹலோ.. சொல்டா. விசயம் தெரியுமா? ‘’


‘’ இப்பத்தான் போன் வந்துச்சு. குமார் தன் பண்ணான் ‘’


‘’அவனே பண்ணீட்டானா. சரி வர்றியா ‘’


‘’ வரனுமானு யோசிக்கறேன் ‘’


‘’இப்படிச்சொன்ன எப்படி? நல்லதுக்குதான் வர்ல. கெட்டதுக்காச்சும்  வாவேண்டா‘’


‘’ ம்.... பாக்கலாம் . நா வேற எம்பட கல்யாணத்துக்கு எங்கக்காவையும், மாம வீட்டையும் கூப்பிடாம பண்ணீட்டேன். அவங்க வீட்டு விசேசத்துக்கு எதுக்கும் போவல. இப்ப காரியம்னு வந்து நின்னா எதாச்சும் சொல்வாங்களோன்னு பாக்கறேன். "


‘’ இங்க பாரு எதையும் போட்டு கொழப்பிக்காத வந்து செய்ய வேண்டிய மொறைய செஞ்சுரு. நீ வரலைன்னாலும் எதுவும் நிக்கப்போறதில்லநீ வல்லைன்னா நாங்க யாரும் எந்த மொற சீரும் செய்ய மாட்டோம். அப்புறம்  பேசிக்கீது நம்ம மூனாம் பங்காளில ஒருத்தன வச்சு மொற செஞ்சுடுவானுவ. அதுக்கு அவனுக எளக்கறமா பேசுவானுவ. அவனுக பேசற மாதிரி வச்சுடாத ‘’


‘’ சரிடா. வர்றேன். அங்க எவனாவது, எகுத்தாளம் பேசுனான்னா அப்புறம் நான் மனுசனாவே இருக்கமாட்டேன் பாத்துக்க ‘’


‘’ யாரும், எதுவும் பேசமாட்டாங்க. நீ கெம்பி வா . அப்பிடி பேசுனாங்கன்னா இருபத்தோரு வீட்டு பங்காளிக எதுக்கு இருக்கறமாமா "

 

போன் பேசிக்கொண்டே வெளியே வந்தேன். சத்தம் கேட்டு ஆசாரத்தில் படுத்திருந்த அம்மா எழுந்துவிட்டாள். அம்மா என்ன ஏதென்று இப்போதெல்லம் கேட்பதில்லை. நானாகச் சொல்வேனென்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். கட்டிலுக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டு மெதுவாகச் சொன்னேன்.


‘’ சுப்பு மாமா போயிட்டாறாமாம்மா ‘’


கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ஆயிரந்தான் இருந்தாலும் உடன்பிறப்பு இல்லையாகைகளை தலையில் வைத்துக்கொண்டு வெகுநேர விசும்பலுக்குப் பிறகு கேட்டாள் .


 ‘’எப்பவாம்


‘’ இப்பத்தான் குமார் போன் பண்ணான். நைட்டு ரெண்டு ணிக்கே உசுரு போயிடுச்சாம். பண்ணண்டு ணிக்கு எடுக்கறதாம். மனிமேகல வரனுமில்ல. "


‘’என்ன ண்ணலாம் போலாமா ‘’


‘’ ம்.. போலாம். போய் காரியத்த கட்டீட்டு வந்துருவோம் ‘’


கிட்டத்தட்ட எழு ஆண்டுகளுக்குப் பிறகு சுப்பு மாமா வீட்டுக்கு, அதுவும் அவரின் இறப்புக்குப் போகிறோம்எங்கள் குடும்பத்துக்கு  அவர் செய்த காரியத்துக்காக செத்தாலும் போகக்கூடாததென்று கட்டுவாக்கியமாக இருந்தது. இன்று  அது உடைகிறது. செய்தி கேள்விப்பட்டு போகாமல் நின்றுவிடலாம் தான். குடும்பத்துக்கு அது அவச் சொல்லாகப் போய்விடும் .  ' இந்தக் குடும்பத்துக்கு அவ்வளவு  செஞ்சும்  மொறைய விட்டுக்குடுக்காம செய்யறாம் பாரு. அதுதான் பெரிய மனுசத்தனம்கறது. ' இப்படி நாலு பேர் பேசுவார்களே அது போதும் .


எங்கள் வீட்டுக் கட்டுத்தாரை  சின்னதும் பெருசுமாக எருமைக்கன்றுகளும், கிடாரிகளுமாக இருக்கும். பூவரச மரத்தில் கரும்பூதம் போல மொவரைப்பூட்டு போட்டு எருமைக்கிடா கட்டியிருக்கும்அப்பா தோட்டந் தொரவைப் பார்த்துக் கொண்டு வாரம் ஒரு முறை சந்தைக்குப் போகும் தேர்ந்த மாட்டுத்தரகரும் கூட. சுழிபார்த்துக் கொடுப்பதில் கெட்டிக்காரர் என்று பேர் எடுத்தவர்


மாடுவாங்க கர்நாடகாவுக்கு  ஏவாரியுடன் போனபோது அங்குள்ள  சுர்தி இன எருமைகள் அப்பாவுக்குப் பிடித்துப்போய் விட்டதுஎருமைக்கிடாரி ஒன்றும்எருமைக்கிடா  ஒன்றும் வாங்கிவந்தார்.


அந்த ரகம் அப்பாவுக்கு ஏன் பிடித்துப் போனதென்று தெரியவில்லை.


சாம்பல் நிறத்தில், குட்டையாகவும்கொம்பு வீச்சரிவாளைப்போல. மேல்நோக்கியிருக்கும். அது மேயும் போது கொம்புகள் கொத்த வருவதைப் போல இருக்கும்அந்த எருமைகளை அவ்வளவு பாங்காகப் பார்த்துக்கொண்டார்.  "ஏன்டா நா வயசாயிட்டேன்னு உங்க அப்பா எருமைய லவ் பன்றாரோ. இப்புடி கட்டுத்தாரயே கதியாக் கெடக்கறாரு. " அம்மா இப்படி என்னிடம் கிண்டலாகச் சொல்வார்.


ஒன்றரை வருசத்தில் எருமை கிடாரிக்கன்னு போட்டது. காளையும் பொழிக்குத்தயாரானது. அந்தக்காளைக்குப் பிறந்ததுதான் கிடாரி்க் கன்னு. சீம்புப் பால் மூனுலிட்டருக்கு மேல் வந்தது. எங்கள் பக்கத்து எருமைகளின் பாலைவிட வெளிர் மஞ்சளாக இருந்தது. ஆறானாத்துப்பால் கிட்டத்தட்ட பத்துலிட்டர் வரை கறந்தது. பொழிகாளையும், எருமைப்பாலும் சுற்றுவட்டாரத்திற்குத் தெரியவர ஒரு நாளைக்கு நாலைந்து எருமைகள் பொழிபோட வந்தது.நாளைக்கு இரண்டுதான் எனக்கணக்கு வைத்திருப்பார். சிலர் முன்கூட்டியே வந்து சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அதிகாலை ஐந்து, ஐந்தரைக்கே வந்துவிடுவார்கள். பௌர்ணமிக்கு அடுத்துவரும் நாட்கள் தினம் இரண்டுக்கு மேல் வருவார்கள். அந்த நாளில் செனை சேத்தினால் கிடாரியாகப் பிறக்கும் என்ற நம்பிக்கை. அந்த நாளில் தூரத்திலிருந்து வருவபவர்களுக்காக மூனாவது பொழிபோட விடுவார் கிடாய் தாவி விழுந்து சரியாக முதிக்காமல் போனாலோ, சினை சேராமல்போனாலோ, அடுத்தமுறை கொழய் அடித்ததும் கொண்டுவரச் சொல்வார். அடுத்தமுறை பொழிக்கு காசு வாங்கமாட்டார்.


ஒரு பர்லாங் தூரத்தில் எருமைகள் பொழிக்கு வருகிறதென்றால் கிடா "கொய்க்.. கொய்க்"என கத்த ஆரம்பித்துவிடும். பட்டாசாளையில் படுத்திருக்கும் அப்பா காளையை தண்ணி காட்டாடி  கொட்டிக்கு முன் ஓட்டிவருவார் . வருகிறவர்கள் எதோ ஒரு உறவுமுறையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். "வாங்க மச்சான். நீங்களே பக்கத்துல இருக்கறப்ப. இவ்வளவு தூரம் கெடாரிய ஓட்டீட்டு வந்திருக்கீங்க "


"வயசாயிடுச்சு மாப்ளே. நாம முதிச்சா செனையாவுமா? அதனாலதான் நீங்க இருகக்கறீங்களேன்னு இங்க கூட்டியாந்தேன். பாத்து முதுச்சுவுடுங்க"


"நா முதுச்சுடுவாங்க மச்சா. வயசான காலத்துல எந்தங்கச்சி பீ மல்லு வழிக்கோணுமான்னு பாக்கறேன்"


"யோவ் மாப்ளே முதிக்கச் சொன்னது கிடாரிய. என்னையல்லோ."


பொழிக்குப் பிறகு எருமை  கொஞ்ச நேரம் காலார நின்ற பிறகே ஓட்டிப்போவார்கள். அந்த நேரத்தில் காப்பி குடித்துவிட்டு ஊர்நாயம் பேசிக்கொண்டிருப்பார்கள். அம்மா யார் வீட்டுக்கு வந்தாலும் காப்பிக்குண்டாவை அடுப்பில் வைத்துவிடுவாள். போகும் போது "படுக்க வுட்றாதீங்க சோளத்தட்டு, வைக்கோலு, சீம்புப்புள்ளு போட்றாதீங்க. சாயந்தரம் வரைக்கும் அன்னாக்கா  ஒயரமா புடிச்சு கட்டீருங்க. மேலுக்கு கொஞ்சம் தண்ணியூத்தி வுடுங்க." வழக்கமாகச் சொல்லி அனுப்பிவைப்பார்.


நாளடைவில் எங்கள் வீட்டை பள்ளத்து வீட்டுக்காரர் என்ற பெயர்  எருமைக்காரர் வீடு என்றாகிவிட்டது. ஊரில் அப்பா முன்னோடும் பிள்ளையாக இருந்தவர். எல்லா நல்லது, கெட்டதுக்கும் முன்னால் நின்று வேலைகள் செய்வார். பக்கத்தில் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ "பள்ளத்துக்காரர் சண்முவத்த ஒரு வார்த்த கேட்ருங்க" என்பார்கள் கூட இதுவும் சேர்ந்து விட்டது. இது யாருக்கு பொறாமையாக இருந்ததோ இல்லையோ சுப்பு மாமாவுக்கும் நிறையவே இருந்தது


ஒரு சினை எருமையை கந்தசாமி பாளையத்துக்காரருக்கு விற்றார். முன்னாடியே  கள்ளிமடை ராமன்  வந்து கேட்டுவிட்டுப் போனான்அவனை கட்டுத்தாரைக்குள்ளேயே விடாமல் பேசியே அனுப்பிவிட்டார். எருமையை ஓட்டிக்கொண்டு  போவதற்காக வந்த கந்தசாமிபாளையத்துக்காரர்  தும்பு  தளக்கவுரெல்லாம் மாற்றி ஓட்டிக்கொண்டு போனார். கடவுக்குப் பக்கத்தில் போகும் போது கள்ளிமடை ராமன் கடவுக்குள் ஒரு கால் வைத்து  கவுரை வாங்கிக்கொண்டான்வேகு வேகுவெனப்போனவர்.


"கந்தசாமி பாளையத்தாரே  என்ன கடவுகூட தாண்டலே அதுக்குள்ள கவு கைமாத்தரீங்க. "


ராமன்தான் பேசினான்  " நீங்கதான் ஒரு யாவரமும் இல்லைன்னீங்க. இவரு வாங்கினாரு. இவர்கிட்ட வெல அதிகங்கொடுத்து வாங்கீட்டேன். கைமாத்திக் கொடுத்ததோட உங்க வேல முடிஞ்சுது. நா யார்கிட்ட வாங்குனா என்ன.? "


"இங்க பார் ராமா உனக்கும் எனக்கும் பேச்சு கெடையாது. நான் இவர்ட்ட பேசிக்கிட்டிருக்கேன். "


"நீ எனக்கு குடுத்ததப்  பத்தித்தானே  பேசறே. அப்ப நான் தான்  பேசுவேன். "


"என்னடா நீ வா போன்னு எகுத்தாளமா பேசறே" பேச்சு கைகலப்பில் முடிந்தது


சத்தம் கேட்டு ஓடிப்போய் விலக்கிக் கூட்டி வந்தேன்பொறுமிக்கொண்டு இருந்தவர். சிவகிரி போய் சரகக்கடித்துவிட்டு நிறை போதையில் தள்ளாடி வந்தார்.  


மறுநாள் போலீஸ் ஸ்டேசனிலிருந்து  தகவல் வந்ததுஅப்பா ராமனை அடித்து உள்காயம் ஆகிவிட்டதாகவும். பல பிரிவுகளில் புகார் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். இதற்கு சுப்பு மாமா தான் காரணமென்று அப்போது தெரியாது.


பந்தல் போட சாமானங்கள் வந்திறங்கியது. பனிரெண்டு ணிக்கு பெருந்துறை மின்மயானத்தில் நேரம் வாங்கியதாகச் சொன்னார்கள். சாப்பாடு வந்துவிட்டதா எனப்பார்த்து வர நாலைந்து பேர் போய் வந்தார்கள். போனவர்கள் வாயைத்துடைத்துக் கொண்டே வந்தார்காள். சுப்பு மாமாவின் பெண் ணிமேகலை சென்னையிலிருந்து வரவேண்டியிருந்தது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் அங்கிருந்து அழைத்து வர கார் போயிருப்பதாகச் சொன்னார்கள். நாங்கள் ஒன்றுகூடி கொரானாத் தொற்றையும், எஸ். பி. பீ மரணத்தையும் பேசிக்கொண்டிருந்தோம்


அப்பாவை  மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். ஒன்றன் பின் ஒன்றாக நடந்து முடிந்ததுமாட்டுக்கு  எந்தச் சுழியிருந்தாலும் பாடைச்சுழி  இல்லாமல் வாங்க வேண்டும் என்பார்அப்படி பாடைச்சுழி போன்றவன் தான் கள்ளிமடை ராமன்வியாபாரிகள் எல்லோருக்கும் ஒரு ஆசை நிறைய வாங்க விற்க வேண்டும் என்பதே, ராமன் வாங்கிய ராசியில் அடுத்தடுத்து விற்கவேண்டியதாகிவிடும். சிலரின் பண்டங்கள் நோய்வாய்ப்பட்டோ, இறந்தோ போய்விடும். அப்படி சிலரது கட்டுத்தாரைகள் காலியாகிருக்கிறது.


தெரிந்தவர்கள் ராமனை கட்டுத்தாரைக்குள் விடமாட்டார்கள். சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடது என்பார்களே அதுபோல ராமன் கண்படக் கூடாதென்பார்கள். அவன் வந்துபோனால் கால்மிதி மண்ணெடுத்து சுத்திப்போடுவார்கள்.


ராமன் ஈரோடு ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டு கேஸ் கொடுத்துவிட்டான். அப்பாவை போலீஸ் அழைத்து கேஸ் போட்டு ஈரோடு கிளைச்சிறையில் இரண்டு நாள் வைத்திருந்தார்கள். நான் ஆட்களை வைத்து பேசி அய்பதனாயிரம் அவனுக்குக் கொடுத்து கேஸை வாபஸ் வாங்க வைத்தோம்வீட்டுக்கு வந்தவர் இரண்டாம் நாள் கட்டுத்தாரையில் மயங்கிய நிலையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தார்


கடும் மன அழுத்தத்தால் தலையில் ரத்தக்குழாய் வெடித்துவிட்டதாகச் சொன்னார்கள். ஒரு பக்கம் கைகால்கள் செயலிந்த நிலையில் வீட்டுக்குத் தூக்கிவந்தோம்பார்க்க அக்கா வந்து போனவள்  அப்பா உயிருடன் இருக்கும்போதே சொத்தைப் பிரித்துத்தரச்சொல்லி  ஆள்விட்டாள். ஒருவாரு சமாதானம் சொல்லியனுப்பினோம். மறுநாள் அதிகாலை புருசனுடன் வந்தவள் "சொத்துக்குடுக்காம சீர் வரிசை மட்டும் செஞ்சு அத்தைய ஏமாத்துன மாதிரி என்னைய ஏமாத்தலான்னு பாக்கறீங்களா அது நடக்காது. நாளைக்கே அவருக்கு ஒன்னுன்னா பொணத்த எடுக்க விடமாட்டேன் ஆமா. " கேட்டுக்கொண்டிருந்த அம்மா ஓடிவந்து அக்காவை அடித்தபடி "காலங்காத்தால ஊட்டுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு என்னைய முண்டச்சியா போன்னு சொல்லறியா. " அம்மாவை அக்கா வீட்டுக்காரன் தள்ளிவிட அம்மா கீழே விழுந்து கூப்பாடு போட்டதைப் பார்த்து நான் அவரின் சட்டையைப்  பிடிக்க ஊரே ரெண்டுபட்டு பிரித்து விட்டார்கள். தலைவிரிகோலமாக வீதியில் நின்று மண்ணள்ளி துற்றி சாபம் விட்டுப்போனாள் அக்கா.


மூன்றாம் நாள் அதிகாலை பேச்சற்றுப்போய் விரைத்துக்கிடந்தார் அப்பா. எப்போது உயிர்பிரிந்தது என்றே தெரியாமலேயே  போய்விட்டார்வு  செய்தி தெரிந்தும்  அக்காவும்வீட்டுக்காரரும்அவர்களின் பங்காளிகளுடன் வந்து நாயம் வைத்து ண்ணி பதினைந்தாம் நாள் பங்குபிரித்துத் தரவேண்டும் என வாய்வாக்கு வாங்கிக்கொண்டுதான் அப்பாவின் பித்தை எடுக்கவிட்டார்கள்.


சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த மணிமேகலையை அழைத்துவரப்போன கார் பெருந்துறைக்குப்  பக்கமாக வந்துவிட்டதால்  சீர் செய்ய ஆரம்பிக்கலாம் என்றார்கள்அந்த நேரத்தில் தான் சுந்தரம் மாமா வந்தார்சுப்பு மாமாவின் தம்பி. காங்கேயத்துக்கு மேற்கே வாத்தியாராக வேலை பார்க்கிறார்அவர்தான் எல்லாவற்றையும் உடைத்தவர். அவர் சொல்லித்தான்  எனக்கும் ஊருக்கும் எல்லா விசயமும் தெரியவந்தது.அப்பா இறந்து பத்தாம் நாள் எருமைக்கிடா துள்ளி விழுந்து  வாயில் நுரை தள்ளி வாக்கில் செத்துப்போனது. துக்கத்துக்கு மேல் துக்கமாக இருந்தது. வீட்டில் மனிதனின் சாவைப்போல நீர்மாலை சுத்திப்போட்டு. மஞ்சத்தண்ணி தெளித்து. கடலைக்காட்டில் ஒரு பாத்தியை அழித்து குழிவெட்டி இறக்கினோம். அப்பாவின் சாவுக்கு வந்ததைப்போலவே அவ்வளவு கூட்டம் வந்து துக்கம் விசாரித்துப் போனார்கள். அக்காவும், சுப்பு மாமாவின் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. அம்மா தோசிக்கால் ராமன் வந்து கால் வச்சதும் துக்கத்துக்கு மேல் துக்கமாக வருகுதே எனச்சொல்லி ஒப்பாரி வைத்தாள்.


மாமாவின் பிணத்தை எடுத்துவந்து குளிப்பாட்டி வைத்து, தாலியருப்புக்கு அத்தை சுத்தி வந்து உட்காரும் போது மணிமேகலை வந்து அத்தையைக்கட்டி அழுதாள். அப்பனை பார்த்து ஒரு முறை அழுதுவிட்டு உள்ளே போனாள். பெண்கள் கூட்டம் வுகா அவளிடம் போனது. எந்தச் சலனமில்லாமல் ஒருமுறை என்னைப் பார்த்தாள்.


கிடா செத்த ஒருவாரத்தில் ஆள் வந்து  பங்கு பிரிப்பதைப் பற்றி அக்கா தரப்பு கேட்டுவிட்டுப் போனார்கள். நாலு நாளில் எல்லாம்  முடிந்தது. அக்காவின் பங்கை பார்த்துக்கொள்ள ராமனின் மகனே வந்தான். எதற்கெடுத்தாலும் சண்டைகளும், சச்சரவாக இருந்தது. இதையெல்லாம் பொறுத்துப்பார்த்து காட்டை விற்றுவிடலாம் என்றால் பாங்கு காட்டை யாரும் வாங்கத்தயாரில்லைகேட்டு வந்தவரும் திரும்பி வரவில்லை. ஒருவர் வந்து அடிமட்டு விலைக்குக் கேட்டார்எப்படியோ ஓரியாடி  எல்லாவற்றையும் விற்றுவிட்டு காங்கேயத்தில் குடியேறினேன்


ஆத்மா ஆம்புலன்சில் மாமாவின் பிம் ஏற்றப்பட்டு பெருந்துறை நோக்கிப்போனது. பின்னால் இரண்டு வேனில்இரண்டு காரிலும் உறவினர்கள் போனோம். சுந்தரம் மாமா பக்கத்தில் வந்து அமர்ந்தார் " வீட்டில கூட்டீட்டு வந்துருக்கிறயா. "


"இல்லீங் மாமா பையனுக்கும், அவங்களுக்கும் ஆன்லைன் கிளாஸ் இருக்குங்கசேதி கேள்விப்பட்டு நேரமே வந்துட்டோம். சாயந்தரமா  அம்மாவ கூட்டியோயி விட்டுட்டு கூட்டியாறனும். "


முச்சை இழுத்துவிட்டுக்கொண்டு "அந்த நாளைக்கப்புறம் நீ ஊர்ப்பக்கமே வரலயாட்டம். "


"நல்லது கெட்டதுன்னா வருவங்க முக்கியமானதுன்னா மட்டும். "


"மணிமேகலைய உனக்குக் குடுத்து ராசியாயிடலாம்னு ஆளா வச்சு பேசிப்பாத்தேன் மாப்ளே. புடி குடுக்க மாட்டேனுட்டார்இப்ப அனுபவிக்காம் பாரு "


"ணிமேகலைய நல்லாத்தானே  வச்சிருக்காரு. "


"அதையேண்டாப்பா கேக்கறே. என்னமோ பெரிய எடம்னுதான் குடுத்தாங்க. பிசினஸ்ல லாசாயிடுச்சுன்னு பணம் வாங்கிட்டு வான்னு  நாலஞ்சு மொற தொரத்தியுட்டு  உங்கள ஏமாத்தி வாங்குன பள்ளத்துக்காட்ட வித்தாச்சு தெரியுமா. யாரோ வெளியூருக்காரர் ஒருத்தரு வாங்கீட்டாராம். அந்தக்  காட்ட வித்த மொத்தக் காசையும் அந்தாளே வாங்கீட்டான்.


 ஊரில்ஒரு விசேசத்திற்குப் போயிருந்தோம். விசேச வீட்டில் யாரோ உங்கசின்ன மாமானுக்கும், பெரிய மாமனுக்கும் எதோ சண்டை . சின்ன மாமன பெரிய மாமன் அடிச்சுட்டானாமா என்றார்கள். அங்கே போய் வேடிக்கை பார்த்த போதுதான் தெரிந்தது சுப்பு மாமா தன் அப்பாவிடம் தனக்கு மட்டுமே சொத்தில் உரிமையென உயில் எழுதி வாங்கிவிட்டார். அதைக் கேள்விப்பட்டு சுந்தரம்  மாமா வீட்டுக்கு முன்னால் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்ற விசயமே தெரிந்தது. சின்ன மாமனை சமாதானப்படுத்தி அழைத்து வரப் போனேன். என்னைப்பார்த்து கதறித் திமிரியவர் " இதா இவங்க குடும்பத்த விட்டு வச்சியா ராமன விட்டு பிரச்சனை ண்ணுனே. இவ அக்காவ விட்டு சொத்துக் கேக்கவிட்டு பிரச்சனை ண்ணுனே. அதெல்லாத்தையும் விட இவங்க குடும்பத்துக்கு பேர் வாங்கிக்கொடுத்த, உசுரா மதிச்ச எருமக்கிடாவுக்கு வெசம் வச்சுக்கொன்னேஇன்னும் என்னல்லாமோ ண்ணினே. இனியும் என்னவெல்லாம் ண்ணத்துணியமாட்டே.  "


சுப்பு மாமா எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். சுந்தரம் மாமா  என்னிடம் திரும்பி " டேய் மாப்ளே, நீ நம்பளைன்னா  ராமனோட பையங்கிட்ட கேளு. "


கோவத்தில் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. ராமனின் மகனின் சட்டையை கொத்தாகப் பிடித்தேன்.  "ஆமாங்க அவிய சொல்றது நெசந்தாங்க அப்பப்ப காசு குடுத்தாருங்கபள்ளத்துக்காடு முழுசா எம்பேருக்கு வந்துட்டா ஒரேக்காரா காசு உனக்குன்னாருங்க. இப்ப எங்கப்பன அடிச்சு கால ஒடச்சுப் போட்டுட்டாருங்க. நாங்க செஞ்சது மாகா தப்புங்க மண்ணிச்சுடுங்க." காலில் விழ வந்தான். விலகி நின்றுவிட்டேன்.


சுந்தரம் மாமா என் தோள்பட்டை இரண்டையும் பிடித்துக்கொண்டு சொன்னார். " மாப்ளே இவிய ண்றத கேட்டும், கேக்காம. பாத்தும் பாக்காம இருந்துட்டேன். இந்தக் குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவுங்க பாவம் எம்புள்ள குட்டிக்கு வந்துடப்படாது. ன்னிச்சுக்க மாப்ளே. "


கரம் கூப்பி பொத்தென்று காலில் விழுந்து கால்களைப் பிடித்துக்கொண்டார். பதறி அவரைத் தூக்கி நிறுத்திவிட்டு. சுப்பு மாமாவைப் பார்த்துக் கேட்டேன்.


"என்ன மாமா என்னென்னமோ சொல்றாங்க. "


"ஆமாண்டா நாந்தான் செஞ்சேன். செய்யச் சொன்னேன். இப்ப என்னங்கறே. என்ன ண்ண முடியும் உன்னால. போடா வேலையப்பாத்துட்டு. " 

 

என்னைப்பார்த்து முறைத்தார். நானும்  முறைத்தேன். திரும்பி நடந்து நாலு எட்டு வைத்துத் திரும்பி  "என்னால எதுவும் செய்ய முடியாதுதான். ஆனா ஒன்னு மட்டும் செய்யமுடியும். "


"என்னடா செய்ய முடியும். செய்டா பாக்கலாம்."


எகுத்தாளமாய் சொன்னவரைப்  பார்த்து காரித்துப்பினேன். ஊரே பார்த்தது.


தொரைமாத்து சீருக்காக  நீளமாக வேட்டியை விரித்து அதன் மேல் கோடி போட்டவர்கள். பின்னப்பூ  போட்டவர்கள்கொள்ளி வைத்தவர் என ஐந்து பேர் நின்றிருந்தோம். கூட்டத்தில் ஒருவர்  என்னைப்பார்த்துக் கேட்டார் " அந்தப் பைய யாரு தெரியலையே. "


"நம்ம எருமைக்காரர் வீட்டு சண்முகம் பையனுங்க. "


வெற்றிலை கொடுத்து வாயில் அடக்கிக் கொண்டு பின்னால் திரும்பி துப்பச்சொல்லிவிட்டு. வாய் கொப்பளித்து பின்னால் துப்பச்சொன்னார் சக்கரக்கத்தி. துப்பினேன் எல்லோரையும் விட. நான் துப்பியது தூரமாகப் போய் விழுந்தது.


 

-000

 

-நடுகல் -9

No comments:

Post a Comment