Saturday 31 July 2021

கூரிய பேனாமுனை கூறிய வார்த்தைகள்


 

கூரிய பேனாமுனை கூறிய வார்த்தைகள்

              -வாஸ்தோ

 

 

சின்னஞ்சிறு குருவியொன்று தன் தலையில் பனம்பழத்தை சுமந்தபடி பறக்க
ஜார்ஜ் கோட்டையில் க்ளைவின் உயிரைப் பறிக்க மறுத்த தோட்டா
என் மார்புக்கறியைத் தின்னும் எண்ணம் கொண்டு திரும்ப
மூளை சிதறிடும் அபாயம் உணர்ந்து 
கண்களை மூடிக்கொண்டு புறமுதுகிட்டு நான் ஓடவும்
ஆதிமனிதனின் அழுகிய சதையின் நெடி வல நாசியிலும்
ஆதிமனுஷியின் ஆதிக்குருதியின் மணம் இட நாசியிலும் 
உணர்ந்து
ஓடும் வேகம் குறைத்து 
ஓட்டம் நிறுத்தி
மண்டியிட்டு தலை நிமிர்த்த
பாவாடையைத் தூக்கி மழிக்கப்படாத தன் பாலுறுப்பின் மயிரைக் காட்டும் திருநங்கை
சாலையில் தலைசிதறிய அன்னையின் வரவை எதிர்பார்த்து இரவெல்லாம் கதறி அழும் அந்த குட்டி நாய்களின் அழுகை
தன் மலக்குழியை நாவால் நக்கிட்ட நீலப்பட நாயகனின் நாவைச் சுவைத்திடும் நாயகியின் புன்னகை
நீரின்றி உலர்ந்த நாவில் உருவான எச்சில் கெட்டியாக தலை சாய்த்திடும் காளை
தொந்தி சரிந்து வழுக்கை விழுந்தவன் முன் தன் பள்ளிச்சீருடை களைந்து அம்மணமாகும் மாணவி 
கொட்டும் மழையில் உடல் நடுங்க ஒதுங்க இடம் தேடும் ஆட்டுமந்தை
மலையமர்ந்த பகவானோடு வியாபார ஒப்பந்தம்
மாட்டின் கொழுப்புக்கு ஆசைப்பட்டு வாய்கிழிந்து மரித்த காட்டுப்பன்றியின் பிணம்
என் தலை மேலமர்ந்த கட்டுமஸ்தான அந்த முறுக்கு மீசைக்காரன் 
போதையேறிய கண்களோடு 
விரக்தியாய்
என் காதோடு சொல்கிறான்
"
மனுஷன் 
ஒரு 
சல்லிப்ப்ப்ப்ப்ப்பய
ஓடி வந்த திக்கைத் திரும்பி பார்க்கிறேன் முதன்முறையாக..
துரத்தி வந்த தோட்ட கண்ணைச் சிமிட்டுகிறது
சிமிட்டிவிட்டு
பசியடங்கா தன் பானை வயிற்றோடு
வேறொரு உடலைத் தேடி திரும்புகிறது

000


No comments:

Post a Comment