Wednesday 3 July 2019

நடுகல் 2 -வா.மு.கோமு கதை


கிறுக்கி வைத்த நவீன ஓவியம்

வா.மு.கோமு

இவள் எப்போது என்னுடன் வந்து ஒட்டிக் கொண்டாள் என்று தெரியவில்லை. ரொம்ப நீண்ட காலமாகவே அவள் என்னைக் கவனித்து வந்திருக்கக்கூடும். அவளை நான் உணர்ந்தது சமீப காலங்களில் தான். இப்போது நான் என் கிராமத்திற்குச் செல்லும் பாதையில் ஓரளவு போதையில் என் ஹீரோ ஹேண்டாவில் வந்து கொண்டிருந்தேன். நல்ல போதை எனக்கு அவ்வப்போது ஊருக்கு வந்து கூட்டில் அடையும் முன்பே வந்துவிடும். என் தாய் அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தை ஒன்று தான். “இந்தக் கருமத்தை குடிக்காம இருக்க முடியாதா உன்னால?”

உலகத்தில் கணவரை இழந்த, ஒன்றே பெற்றெடுத்த  தாய்மார்கள் எல்லோருக்கும் தான் போய்ச் சேர்வதற்கும் முன்பாக இந்தப் பயல் போய்ச் சேர்ந்து விடுவதை கண்ணால் காண முடியாத சோகம் தான். இதுவே இரண்டு தண்டுவன்களைப் பெற்றிருந்தால் அதில் ஒன்று குடியாரப் பயலாக இருந்திருந்தால் பார்ப்போரிடம் எல்லாம் வசனம் பேசுவார்கள். “சின்னவன் தான் குடியாரனாப் போயிட்டானுங்க.. பெரியவன் தங்கக்கட்டி

உலகம் மிக மோசமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் வாழ்வதற்கு ஒவ்வொரு பெரியவர்களுக்கும் கொடுத்து வைத்திருக்கிறது. ஆனாலும் என்ன அவ்வப்போது டிஜிட்டல் இந்தியா ஒருத்தனையும் விடாமல் சதா மிரட்டிக் கொண்டேயிருக்கிறது அவன் தூங்குகையிலும் கூட! இதில் பள்ளிக்கூடம் செல்லும் பயல்கள், பெண்கள் எல்லோரும் குடித்து மாள்கிறார்கள் என்று குடியை அறியாத பெரியவர்கள் பேச்சாய்ப் பேசுகிறார்கள்.

சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி கொலை செய்து குப்புற வீசி விடுகிறார்கள். புகைப்படத்தைக் கண்டவர்கள் எல்லோரும் தானே செத்ததாய் உணர்கிறார்கள். வலைதளங்களில் ஒவ்வொரு ஆடவனும் தன் சாமார்த்தியத்தை பெண்ணிடம் காட்டி பதிவு செய்து, இந்தா பார்த்துக்கோங்கடா எம்படதை!’ என்று பதிவேற்றி மகிழ்கிறார்கள். ஒவ்வொரு தளங்களும் அரசாங்க லைப்ரேரி போல ஆண் பெண் உடல் இச்சைகளை வரிசைப்படுத்தி காலா காலத்துக்கும் இருக்குமாறு சேகரித்து வைத்திருக்கிறார்கள். இதில் பெண்களும் டிஜிட்டல் உலகில் சும்மா இருக்க முடியமா? ’என்னையும் என் அழகையும் பார்த்துச் சாவுங்கடா !’ என்று துணி மேல் துணியாய் கழற்றி, விட்டால் தோலையும் கழற்றிக் காட்டி ஆண்களை செருப்பாலடித்த அல்லது செருப்பில் இசியைத் தொட்டு அடித்த மகிழ்வில் நிம்மதியாய் உறங்கச் செல்கிறார்கள்.

இந்த உலகம் மிகச் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. அதாவது அழிவை நோக்கி. சீக்கிரமாக அழிவு வந்து விட்டால் தேவலாம். குழந்தை குட்டியோடு சிறப்பான வாழ்க்கை வாழ்பவனும் சாவான், ஒன்றுமில்லாமல் பிச்சையெடுத்து திரிபவர்களும், கூடவே கடவுள்கள் என்று சொல்லப்பட்டவர்களும்.

குடித்து விட்டால் மனம் பயங்கரமாய் சுழன்று பல விசயங்களையும் ஒரே மூச்சில் பேசிவிட தயாராகிவிடுகிறது. இன்று மட்டும் என் தாய் புதிதாய் ஒன்றும் எனக்காகச் சொல்லப் போவதில்லை. “சீக்கிரமா முடிஞ்சிடுதுன்னா தூக்கி வீசிட்டு அக்கடான்னு ஒத்தையில உக்கோந்துக்குவேன் நமக்கொரு சாவு வருமானு பாத்துட்டு!” தாய் பக்கத்து வீட்டுக்காரியிடமோ, அல்லது கல்யாணப் பத்திரிக்கை கொடுத்துப் போக வந்த குடும்பத்திடமோ என்னைப் பற்றி சொல்லி முடித்திருப்பாள். அவள் தான் என்ன செய்வாள் பாவம்? ஒரு முப்பது வயதிலேனும் சாலையில் செல்லும் ஒருத்தியை இழுத்து வந்துஇதா பாரு உம்பட மருமகொ!’ என்று நிறுத்தியிருந்திருக்க வேண்டும் நான். அதற்கு கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது டிஜிட்டல் இந்தியாவில். அந்த மருமகளும் அத்தே அந்த நாடவத்துல வர்றவொ பெரிய பார்டர் வச்ச சேலையாவே கட்டிட்டு வர்றா பாத்தீங்களாத்தே!’ என்று அம்மாவுக்கு கம்பெனி குடுத்து அமர்ந்து சரியாய் பத்து வருடமாகி இருக்கலாம். ஆக என் வயதை மிகச் சரியாய் சொல்லி விட்டேன் இப்போது.

இருபத்தி ஐந்து வயதில் கிராமத்துக்குள் எனக்கொரு காதல் வந்தது. காதல் வந்ததும் கவிதை வந்துவிடும் என்பது உலக நியதி. ஆனால் காதலியாகப்பட்டவள் ஐந்தாவது வரை தான் நடுநிலைப்பள்ளியில் படித்திருந்தாள். நல்ல மணியான பெண். அவளுக்கு கவிதை புரியாது. அது அவளுக்கு வேண்டியதுமில்லை. இந்த இடத்துல இந்த வரியில உன் கவிதையை தப்பா எழுதியிருக்கேடா! என்று சொல்லும் காதலிக்காக எவனும் கவிதையே எழுத மாட்டான்.

முதல் காதலியை தப்பாகப் பேசும் ஆண் இந்த உலகத்திலேயே இல்லை அவள் காறி அவன் முகத்தில் துப்பியிருந்தால் கூட! அந்த மணியான பெண் இப்போதும் உள்ளூருக்குள் தான் இருக்கிறாள். அவள் கணவன் செத்துப்போய் இப்போது இருக்கலாம் ஏழு வருடங்கள். அவள் எப்போதேனும் என்னைக் கடக்கும் சமயங்களிலெல்லாம் புதிதாக முந்தா நேத்து தான் சமைந்தவள் போல வெட்கப்பட்டுக் கொண்டு செல்கிறாள். எதாவது பேச்சுக் கொடுத்தால் குமரிப்பெண் ஓடுவது போலபத்தாயிரம் ரூவா எடுத்துட்டு ஊட்டுக்கு வாடா!’ என்று சொல்லி ஓடுகிறாள். நான் பத்தாயிரம் கொடுப்பது பற்றி பிரச்சனை ஏதுமில்லை. அந்தத் தொகையை மகளின் படிப்புச் செலவுக்கு கூட அவள் பயன்படுத்திக் கொள்ளலாம். செய்யட்டும். முதலாக அந்த பழைய காலங்களிலேயே மார்பகங்களைப் பிடிக்க விடமாட்டாள். இரண்டாவதாக அவைகள் இரண்டும் இன்னமும் அப்போதைய அளவிலேயே இருக்கின்றன. அவள் கணவனுக்கும் என்கதியே போல. முலை பிடித்துப் பார்க்காமலேயே செத்து விட்டான் பாவம்.

அடுத்ததாக அவள் காமத்தை கொண்டாடுபவளல்ல. இரவு நேரங்களில் கையால் நானே செய்து கொள்வேன் என்பாள். ஒரு பிணத்தை புணரும் அனுபவம் பல காலம் கழித்து எனக்கு ஏற்பட்டு விடலாம். பத்தாயிரம் கொடுத்திருக்கிறானே என்று பாடியை பாயில் சாய்த்து விடுவாள். அதில் அவளுக்கொரு காரிய நிமித்தம் இருக்கிறது. மூன்றாவதாகசீக்கிரம்.. யாராச்சிம் வந்துடுவாங்கஎன்பாள். அந்த சமயத்தில் அவளைக்காண டெல்லியிலிருந்து கோட்டு சூட்டு போட்ட பெரிய மனிதர் ஃப்ளைட்டிலிருந்து இறங்கி நேராக வந்தே விடுவார் போல துரிதப்படுத்துவாள். நான்காவதாகஅதையெல்லாம் எதுக்கு அவுக்குறே? தெரியமாட்டீங்குதா?’ என்பாள். ஒருவன் என்னதான் காமம் மிகுதியில் ஒரு பெண்ணிடம் அதைத் தீர்க்க நெருங்கியிருந்தாலும் ஒருத்தியின் பேச்சுக் கூட அவனையே நொந்து கொள்ள வைத்து காமம் காணாமல் போய் முழிப்பான் திருட்டு முழி. ’இதென்ன இப்பிடிக் கெடக்குது?’ என்று சொல்லி அவனைச் சாவடிப்பாள். அவள் நினைத்துக் கொள்வாள் மிஷின் ரிப்பேர் என்று.

ஐந்தாவதாக காரியத்தை ஏனோ தானோவென துவக்கி விட்டாலும், ‘அந்த சின்னச்சாமி எழவுக்கு நீ வரலியாட்ட? நான் அங்கியே தான் பொழுதுக்கும் இருந்தேன். உங்கொம்மா தான் வந்துச்சுஎன்று நாயமடிப்பாள். இப்படி யோசித்துப் பார்க்கையில் அவளிடம் பத்தாயிரத்தை தூக்கிக் கொண்டு செல்வதற்கு பதிலாக நான் கலியாணமே பண்டீருவேன் பத்தாயிரத்துக்கு. மிச்ச செலவுப்பணத்தை தான் என் அக்கெளண்ட்டில் போட டெல்லியில் ஆள் இருக்கிறதே!

அவளின் பெண் பனிரெண்டாம் வகுப்புக்கு சென்று கொண்டிருக்கிறாள். தான் படிக்காவிட்டாலும் மகளைப் படிக்க வைப்பதில் கெட்டியாய் இருக்கிறாள். அவள் வீட்டில் அவளும் அவள் மகளும் மட்டும் தான். அவள் மகளும் ஒரு குடிகாரியாக இருந்திருந்தால் என்னைப் போல இந்த இரவில் உள்ளூர் நோக்கி ஒரு டிவிஎஸ் ஐம்பதில் சரியான போதையில் சென்றால், அவள் அம்மாவும் அவளிடம் என் தாயைப் போன்றே வசனங்கள் பேசலாம். எனக்கு நல்லாத்தான் ஏறிடுச்சாட்ட இருக்கே! வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினேன். சீக்கிரம் இங்கிருந்து நான் கிளம்பியாக வேண்டும்.

எனக்கு இன்று போதை அதிகமாவதற்கு என் நண்பனே காரணம். அவன் பையன் தன்னை விட மூத்தவள் ஒருவளோடு ஓடிப் போய் விட்டானாம். உள்ளூருக்குள் இருந்து கொண்டு எனக்கு தகவலே தெரிவதில்லை. நடந்து மூன்று நாட்களாகி விட்டது என்றான். நன்றாக இன்று மாலையில் அவனிடம் மாட்டிக் கொண்டேன். ஒரு கோட்டரில் வீடு வந்து விடுபவன் நான். தினக்குடிக்கு அதுவே மதி.

ஆனாலும் வழியாக வந்தவன், பாலத்து திண்டில் அமர்ந்து மேற்கே சாயும் சிவப்புச் சூரியனை ரசித்துக் கொண்டே மனதில் ஒரு கவிதையை எழுதிக் கொண்டிருந்த சமயம் தன் பைக்கை நிறுத்தி என்னுடன் அமர்ந்து விட்டான். அவன் முகம் வழக்கம் போலில்லை. அவனின் செத்துப்போன அப்பனைப் போன்றே வடிவெடுத்திருந்தது. மீசையும் அப்படித்தான் கரும்சாயம் பூசாமல் விட்டிருந்தான். “இந்த மாதிரி!’” என்று விசயத்தை சொல்லி விட்டு சின்னதாய் விசும்பினான். கடைசியாய் ஒன்று சொன்னான். ‘உன்னியாட்டமே கல்யாணங் கட்டாமெ இருந்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம்டா பழனிச்சாமி!’ இந்த இடத்தில் என் பெயரை உங்களுக்கு தெரியப்படுத்தி விட்டான் நண்பன். நான் அவன் பெயரைச் சொல்லப் போவதில்லை.. ஏனென்றால் அவன் வெறுமனே என் நண்பன்.

அவன் அப்படிச் சொல்லவும்புடிச்சு இவனை செஞ்சால் தான் என்னவாயிடும்?’ என்றே எனக்கு கொந்தளிப்பாகி விட்டது. இல்லைஉன் பொண்டாட்டி உனக்கு போதும்னா என் ஊட்டுல கொண்டாந்து உட்டுட்டு என்னியாட்டம் தனியா கெடந்துக்கோஎன்றே உடனே சொல்லிவிடத் தோணிற்று. ஆஹா! ஒரு நவீன கவிதைக்கான பல்பு மண்டைக்குள் எரிந்தது. அதை உடனே முடித்து இலக்கிய ஏட்டுக்கு அனுப்பி விடணும். இன்னும் பேசினால் இன்னும் ரெண்டன்னம் கவிதை கிடைக்கலாம்.

கொந்தளிப்பை அவன் ஊற்றி தண்ணீர் கலந்து வைத்திருந்த டம்ளர் மீது காட்டி விட்டேன். அதாவது எடுத்தவுடன் மடக் மடக்கென அருந்தி விட்டு நான் மிச்சம் வைத்திருந்த மீன் மண்டையை  எடுத்து பொறுக் பொறுக்கென கடித்தேன். ‘தாயொலி மெதுவாத் தின்னு தொலையிடா நாயிஎன் காதுப்புறமாக அவள் சொன்னாள். ‘நீ கம்முனு போளே உம்படத மூடிட்டு!’ நான் மென்று கொண்டே சொல்லவும், நண்பன் இப்ப எவடா இருக்கா இங்க? என்னையக்கீது மூடிட்டு போடாங்கறியா?’ என்றான்.

உன்னியச் சொல்லுவனா? நீயே பாவம் பையன் போன துக்கத்துல இருக்கே! எம்பட காதுக்குள்ள ஒருத்தி அப்பப்ப வந்து என்னைய திட்டிட்டே இருக்கா! அவளைச் சொன்னேன்! கவலப்படாதே! உன் பையன் இன்னும் ரெண்டொரு நாள்ல ஊட்டுக்கு வந்துருவான்என்ற போது அவன் காலி டம்ளரில் சரக்கை ஊற்றிக் கொண்டிருந்தான். “கலியாணம் பண்டாம பொழுதோட்டிட்டு இருக்குறதும் கஷ்டமா தானிருக்குமாட்ட! செரி நாம ரெண்டும் வழுவுக்கு இன்னிக்கி போலாமா? போயி செய்யுவோம்என்றான்.

உனக்கே இப்படியெல்லாம் தோணுதுன்னா, இளம் ரத்தம் உன் பையன் பண்ணது தப்பேயில்ல! ஆமா உன் சம்சாரம் பையன் இப்படி பண்டீட்டானேன்னு தண்ணியப் போட்டுட்டு அழறாளா?” என்று நான் நண்பனிடம் கேட்ட போது அவனது அலைபேசி சப்தமிட்டது. ‘பொண்டாட்டியாத்தான் இருக்கும்.. மூனு நாளா எழவு உழுந்த ஊடாட்டம் இருந்துச்சுடா பழனிச்சாமி. ஊட்ட உட்டு நகர உடமாட்டேனுட்டா! எல்லாரும் ஊடு தேடிவந்துஇப்பிடியாமா!’ன்னு கேட்டுட்டு போனாங்க! தண்ணி போடறதுக்கு கூட எம்பட மாமியா உடப்புடாதுன்னு சொல்லிட்டாளாட்ட இருக்குது!’ என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்து காதில் வைத்தான்.

மாமா எங்க மாமா போனே? நம்ம பையன் ஊடு வந்துட்டான் மாமா. அவன் பொண்டாட்டி என்னியாட்டமே குண்டா செக்கச் செவேல்னு இருக்கா!”

நிறுத்து நிறுத்து.. உன்னியாட்டம் செவேல்னா.. கருங்குண்டி. வந்துட்டாங்கன்னா  சோத்தாக்கிப் போட்டு  நம்ம கட்டல்ல படுத்து டொக்கு போடச் சொல்லு! ராசியான கட்டலு.. மளார்னு செவச் செவன்னு ஒரு பையனையோ புள்ளையையோ பெத்து உன்னைய பாட்டியாக்கிடுவான். நான் இன்னிக்கி வெடிஞ்சு தான் ஊட்டுக்கே வருவேன்! என் தங்கத்து கூட பேசிட்டு இருக்கேன். என் தங்கத்து கிட்ட பேசுறியா? இதென்ன பக்கத்துல தான் உக்கோந்திருக்குது!”

அவ எவொ தங்கம் உனக்கு சாமத்துல? குடு அவ கிட்ட போனைஎன்றதும் என் கையில் திணித்து விட்டான் அலைபேசியை.

அலோவ்! நான் பழனிச்சாமி பேசுறேன்! பையன் ஊடு வந்துட்டானா?”

அண்ணா நீங்களா? அந்த பாப்புரக் கொஞ்சம் கமியா குடிக்கச் சொல்லி தாட்டி உடுங்கண்ணா!”

இல்ல வழுவுக்கு இப்ப மாட்டுறதுக்கு போகோணுமாமா! சொல்லிட்டு இருக்கான்!”

செத்துப் போன தவக்காய வெச்சுட்டா? அவன் எங்கீண்ணா போறான் அவட்ட கழண்டவன்கேட்டுக் கொண்டிருந்த நண்பன் சப்தமிட்டான். ‘லேய், வந்தன்னா கிழிச்சிப்போடுவன் பாத்துக்க!’.

அவனுக்கு என்னையாட்டம் பொண்டாட்டி பையன் இல்லாம ஒத்தையா கெடக்க ஆசையாமா! அதனால உன்னையக் கொண்டாந்து எம்பட ஊட்டுல உட்டுடறானாமா!”

அதுங்கூட நல்லது தான்ணோவ்! என்னெ நல்லாச் செய்வீங்களா?”

போனக் கட் பண்றா பழனிச்சாமி, அவ சூர நாயம்னா வளைச்சு வளைச்சு பேசிட்டே இருப்பாஎன்று நண்பன் சொல்ல நானாக கட் செய்து அவன் பாக்கெட்டில் போனை வைத்தேன். வைத்ததுமே மறுபடியும் டம்ளரை எடுத்து கவிழ்த்திக் கொண்டேன். ‘நீ இன்னிக்கி இவத்திக்கே செத்துப் போயிடுவீடா தாயலிஎன்று வலது காதுப் பக்கமாக அவள் சத்தமிட்டாள். ‘செத்தா என் பாடிய தூக்கிட்டு போடிஎன்றேன் கோபமாய். பின்னே போனில் நண்பனின் மனைவி என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டாளே!

ஏற்கனவே ஐந்தாறு வருடம் முன்பாக நண்பன் இருக்கிறானா? என்று பார்த்து வர அவன் வீடு சென்ற போது அவள், ‘வாங்கண்ணா.. அது காத்தாலயே திருப்பூர்ல ஒரு சோலின்னு போட்டு போயிடுச்சு! வந்ததே வந்தீங்க துளி காபித்தண்ணியாச்சிம் குடிச்சுட்டு போவீங்களாமா உள்ளார வந்து உக்கோருங்கஎன்க வாசலோடு போக மனமில்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்து விட்டேன். அப்போது அவர்கள் தங்களுக்கென வீடு ஒன்றை கட்டிக் கொள்ளவில்லை.

சாலை மேய்ந்து குடிசையில் வாழ்ந்தார்கள். ஆனாலும் குடிசையினுள் ஒரு சேர் இருந்தது. மண் அடுப்பில் மளாரென விறகைத் திணித்து போசி வைத்து படப் படவென காபி தயாரித்து விட்டாள். முக்காலி ஒன்றின்  மீது அமர்ந்திருந்தவள் காபியை டம்ளரில் ஊற்றி ஆற்றிக் கொண்டிருகையில் பாவாடை இருட்டில் எதுவோ தெரியவரவே, ‘சித்த நல்லாத்தான் சம்மணம் போட்டு உக்காரேன்என்று சொல்லி விட்டேன். நிதானமாக இழுத்து விட்டுக் கொண்டு, ‘நீங்க பாக்காததாண்ணா முன்னப் பின்னெ!’ என்றாள்.

அப்போதே கவிதை எழுதுவதை விட்டு விட்டு ஒரு சிறுகதை ஆசிரியனாக மாறியிருக்கலாம் நான். நல்ல நல்ல டைலாக்குகளை வைத்து அப்படியே சாலைக்குள்  காரியம் பண்டி விட்டு வேர்த்துப் போய் சட்டை நனைந்து கிளம்பியிருக்கலாம். கவிஞனாகித் தொலைத்து விட்டேன். நண்பனுக்கு துரோகம் செய்யும் மனநிலையை இன்னும் கடவுள் எனக்கு தரவில்லை. தர்றதுக்கே ட்ரை பண்ணுறார் போல இந்த போன் காலில்! திடீரென நண்பனின் மனைவியின் உடல் நிறத்தையும் அவள் பருத்த முலைகளையும் ஞாபகத்திற்கு கொண்டு வந்து காமமானேன். போதையில் அதையும் மனதில் ரசித்து உறிஞ்சினேன். நான் கவிஞன் என்பது நிரூபணமாயிற்று இருட்டு விழுந்த அந்த நேரத்தில். நண்பன் பீடி புகைத்தபடி இருந்தான். எனக்குமொரு பீடி பற்ற வைக்கலாமென்றிருந்தது. அது மூடைக் கெடுத்து விடும். ஹா! அடுத்த கவிதையையும் கேட்ச் செய்து விட்டேன். இன்னும் ஒன்று வேண்டும் அந்த இதழுக்கு.

அதன் பின் நண்பன் சரக்கு தீர்ந்து விட்டதாகவும் ஒரே அமுத்துல வாங்கி வந்து விடுவதாகவும் என்னிடம் சொல்லி தன் வண்டியை முறுக்கிக் கொண்டு கிளம்பியதும் நான் கொஞ்சம் அதிக திருகலுடனே வண்டியைக் கிளப்பினேன். சொன்னது மாதிரி விடிவதற்குள் இங்கேயே இரண்டு பிணம் கிடந்து விடலாம். அந்த மற்றொரு கவிதையை  எழுதாட்டி கெடந்து சாட்டாது. கவிதைக்கான 2018 விருதை வேறு யாரேனும் வாங்கிக் கொள்ளட்டும்.

நான் சாலையோரத்தில் வண்டியை நிப்பாட்டினது உச்சா அடிக்க! இறங்கி தடுமாறி வண்டியை சைடு ஸ்டேண்டு போட்டு விட்டு சாலையோரம் சென்று லுங்கியைத் தூக்கினேன். ‘உக்கோந்து ஒழுக்கமா ஊத்துடாப் பன்னி!’ என்றாள் அவள். இவள் தொந்தரவு கடந்த ஆறு மாதமாகத்தான். அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் சடச் சடவென அடித்தேன். ‘மாடு மல்ற மாதிரியே மல்றாம் பாரு.. சூத்து மேல ஒரு உதை உடறன் பாருகுரல் கேட்கவும் நிஜமாகவே யாரோ உதைத்தது போன்றே இருக்கவே தடுமாறி என் உச்சாவின் மீதே குப்பறடித்து விழுந்தேன். ’இவ என்ன இப்ப பேசறதை உட்டுப் போட்டு கால் வைக்கவும் ஆரம்பிச்சுட்டா! மொத இவளுக்கு ஒரு வழியப் பண்டணும்நினைத்துக் கொண்டே தடுமாறி எழுந்தேன். நண்பன் வேறு பாலத்திண்டில் ஆள் இல்லையென்றதும் விர்ர்ரென முறுக்கிக் கொண்டு வந்து விட்டானென்றால் பாட்டிலை நீக்கி விடுவான்.

திடீரென என் தாயை நினைத்துக் கொண்டேன். ஏனோ எனக்கு என்னையே செருப்பால் அடித்துக் கொள்ளலாம் போன்றே இருந்தது. இதெல்லாம் என்ன பொழப்பு? ‘தாயே நான் இனி குடிக்கவே போமாட்டேன் தாயே! போவ மாட்டேன்என்று தாயின் மடியில் போய் தலை வைத்துப் படுத்துக் கொள்ள வேண்டும். கவிஞன்டா. அடுத்த கவிதை கிட்டி விட்டது! கொடுத்து வைத்த இலக்கிய ஏடு அது! பழனிச்சாமியின் மூன்று தலைப்பில்லாக் கவிதைகள்! பக்கத்திலேயே முலைகள் ஆட கிறுக்கி வைத்த மாடர்ன் ஓவியம்.

நான் வண்டியைக் கிளப்பிக் கொண்டு எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்று தெரியவேயில்லை. இப்படி சிலசமயங்களில் நடந்து விடுகிறது. இதுவே கிராமம் என்றானதால் விண்ணம் படாமல் வீடு வந்தாகி விட்டது. டிஜிட்டல் நகரில் பழனிச்சாமி வாழ்வதாக இருந்திருந்தால் சாவுச் சேதியை பல வருடங்கள் முன்பாகவே தினமலர் போட்டிருக்கும். தாயும் என்னுடனேயே கூடிய சீக்கிரம் மேலே வந்திருப்பாள். நண்பனின் மனைவிஎன்னெ நல்லாச் செய்வீங்களா?’ என்று கேட்டிருக்க மாட்டாள்.

வவுத்துக்கு ஆகாரம் போடுவதற்கான கண்டிசன் இல்லாமல் வண்டியை பத்திரமாக அதனிடத்தில் நிறுத்தி விட்டு கொஞ்சம் தள்ளி நீட்டி விழுந்து விட்டேன். சித்திரை மாசக் காற்று சுழற்றி சுழற்றி முகத்தில் அடிப்பது இதமாக இருந்தது. மழை பெய்தால் இன்னும் சுகமாக இருக்கும். கவிஞண்டா! தாய் வந்து கூப்பிட்டுப் பார்த்திருக்கலாம். முனகும் நிலையில் கூட நானில்லை. நடுச்சாமத்தில் உச்சா வந்து எழுந்து விட்டேன். போதை தெளிந்திருந்தது. மிச்ச போதை என் உச்சாவில் இருந்திருக்கலாம். அதுவும் போன பிறகு இந்த உலக வாழ்க்கையைப் பற்றி ஒரு கணம் யோசித்தேன். வானில் நட்சத்திரங்கள் சும்மாவுக்கேனும் நிறைய இருந்தன. கையில் ஒரு ரிவால்வார் இருந்தால் ரெண்டன்னத்தை சுடலாம். இவள் காதுக்குள் எதுவும் சொல்லவில்லை. அவளும் கூட எழுப்பிப் பார்த்திருக்கலாம். போக என்னை உதைத்துத் தள்ளிய கையோடு இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டானென நண்பனின் காதுக்கு போயிருக்கலாம். எப்படியாயினும் இதுவும் கூட எனக்கு ஒரு இழப்பு தான்.

என் அறைக்கு வந்து விளக்கைப் போட்டேன். மூன்று கவிதைகளையும் கையோடு எழுதி முடித்து விட்டு பாயில் விழுந்து விடலாமென இருந்தது. இருந்தும் காமம் வேறு சிக்கலாயிருந்தது. பாயை விரித்து உச்ச வேகத்தில் ஃபேனைப் போட்டு விட்டு போர்வையைத் தூக்கிக் கொண்டு வந்து விழுந்தேன். நண்பனின் மனைவியை நல்லாவே புணர்ந்தேன் என் குறியை ஆட்டிக் கொண்டே!



No comments:

Post a Comment