Monday 11 March 2019

நடுகல் ஒன்றில் வெளியான கட்டுரை

























பாலியல் வன்முறை - ஒரு சமூக பார்வை

-பழ.வெள்ளைச்சாமி

            தினமும் செய்தித்தாள்களைத் திருப்பினால் பாலியல் வன்முறை, பாலியல் கொலை, ஒருதலைக் காதல் கொலை மற்றும் பாலியல் சீர்கேடு தொடர்பான செய்திகள் இல்லாமல் இருப்பதில்லை. இவ்வாறு ஏன் எப்போதைக்கும் இல்லாமல் தற்போது நிகழ்கிறது. இதற்கு என்ன காரணம்?

            இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களிடம் இவ்வாறான நிலைபாடு இல்லாத போது ஆறு அறிவு படைத்த மனித இனம், பகுத்தறிவு படைத்த மனித இனம் மற்றும் மகான்களும்,பெரியவர்களும் வழிகாட்டி வழிநடத்தப்படுகின்ற மனித இனம், இவ்வாறான அவல நிலைக்கு ஆட்பட வேண்டிய காரணம் என்ன? என்று ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

            ஹோமியோபதி ஆய்வாளர் என்ற முறையில் இதை சமூகத்தால் திணிக்கப்பட்ட வியாதி என்ற கூற வேண்டியுள்ளது.

            பாலுறவு என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. மற்ற உயிர்களுக்கு பாலுறவு என்பது இனவிருத்தி என்பது முதன்மையானதாகவும், இன்பம் துய்ப்பது இரண்டாம் நிலையாகவும் இருக்கிறது. ஆனால் மனிதனில் மட்டும் இன்பம் துய்ப்பது முதன்மையானதாகவும் இனப்பெருக்கம் என்பது இரண்டாம் நிலையாகவும் இருக்கிறது.

            விலங்குகளில் பெண் விலங்குகள் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அந்தப் பெண் விலங்கு கருத்தரிக்கும் காலம் வந்தால்தான் அதனோடு ஆண் விலங்கு கூடும். அதற்குத் தகுதியில்லாத எந்த பெண் விலங்கு கூடவும் இன்பம் துய்ப்பதற்காக எந்த ஆண் விலங்கும் விரும்பாது. அதே போல் எந்தப் பெண் விலங்கும் கருத்தரிக்கும் காலம் தவிர்த்து மற்ற நாட்களில் உடல் உறவுக்கு இணங்குவதில்லை.

            ஆண் விலங்கில் எல்லாக்காலங்களிலும் உறவுக்கு தயார் நிலையில்தான் உடல் கூறு அமைப்பு இருக்கிறது. எல்லாக் காலத்துக்கும் உறவுக்கு தயாராக இருந்தாலும் கருத்தரிக்க தயாராக இல்லாத பெண் விலங்குடனோ அல்லது கருவுற்ற பெண் விலங்குடனோ உடல் உறவு கொள்வதில்லை. ஆண் விலங்கானது கருவுறத் தயாராக இருக்கும் மற்ற விலங்குகளோடு உடல் உறவில் ஈடுபடுகிறது.

            இதிலிருந்து மனிதர்கள் முற்றிலும் வேறுபடுகிறார்கள். இவர்களுக்கு சமூக ஒழுங்கு இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு உள்ளது இந்தச் சமூகக்கட்டுப்பாட்டால் பாலுறவு ஒழுங்கு மனிதனில் கெட்டு விட்டது. பெண்ணானவள் கருத்தரிக்கும் காலம் இல்லாத போதும் மிகுகாமப்படுகிறாள். குழந்தை பிறந்திருக்கும் நிலையிலும் கருவுற்ற நிலையிலும் காமுறுகிறாள். இது மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டுள்ளது. இது சமூக ஒழுங்கு என்ற கட்டுப்பாட்டால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது.

            ஆண்கள் பருவமடைந்த காலத்திலிருந்து தினமும் உறவு வைத்துக் கொள்ள தயாராக உள்ளவனாக இருக்கிறான். மற்ற விலங்குகளைப் போல் இல்லாமல் சமூகக் கட்டுப்பாட்டில் பாலியல் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறான். உடல் கூறு வகையில் பார்த்தால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஹார்மோன் மற்றும் நாலமில்லாச்சுரப்பிகள் இவைகளின் செயல்பாடுகள் சில மாற்றங்களைத் தவிர ஒத்ததாக இருக்கும். இருபாலர்களிலும் முதன்மைச் ஜனன உறுப்புகள் மற்றும் இரண்டாம் நிலை ஜனன உறுப்புகள் 14 வயதிலிருந்து 16 வயதுக்கும் முழுமை அடைந்து, அவர்கள் உடல் உறவுக்கு தயார் ஆகி விடுவார்கள்.

            உடல் கூறு அமைப்பும் உடல் இயங்கு முறையும் பருவத்திற்கு ஏற்றார் போல் அதன் வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அதற்கான வடிகால் 25 வயதுக்கு மேல் தான் கிடைக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் 14, 16 வயதிலிருந்து பாலுறவுக்குத் தயாராக இருந்த போதும் அவர்களால் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது பாலுறவு உணர்வு அடக்கி வைக்கப்படுகிறது. ஆனால் விலங்குகளுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. சமூகக்கட்டுப்பாடு மற்றும் மானுட ஒழுங்கு இந்த பாலுறவு உணர்வு அடக்கப்படுவதற்கு காரணமாகிறது.

            பாலுறவு உணர்வு அடக்கப்படும் போது மனோதத்துவ ரீதியாக பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஆண்களில் மூர்க்கத்தனம், கோபம், வெறித்தனம், பைத்தியக்காரத்தனம், மந்தத்தனம், மறதி நோய், ஞாபக சக்தி இன்மை, நிலைக் கொள்ளாதனம். உடல் உறுப்பகளில் பல பாதிப்புகள் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் எத்தனையோ நோய்களுக்கு ஆட்படநேரிடும் இவ்வாறு பாலுறவு உணர்வு உள்ளமுக்கப்படுவதால் இவ்வாறு பல மன, உடல் நோய்கள் தோன்றிடும்

            இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையாளர்களாய், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எதையும் யோசிக்காமல் காரியமாற்றுபவர்களாய், முறைகேடான செய்கைகளுக்கு சொந்தக்காராய், ஒரு கட்டத்தில் கொலை மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கு ஆட்படுவார்கள். மாணவர்கள் கோபம், சிடுசிடுப்பு, ஒழுங்கீனமாக பேசுவார்கள், மறதி, ஞாபக சக்தி இழப்பு, முரட்டுத்தனம், சமூகத்திலிருந்து ஒதுங்குதல் போன்ற நிலைக்கு ஆட்படுவார்கள்.

            14 வயதில் தோன்றிய பாலுறவு இச்சைக்கு 30 வயதில் வடிகால் அமையுமானால் என்ன செய்வது. பல குற்றங்கள் தோன்ற இந்த பாலுறவு உணர்வு அடக்கமே என்றால் மிகையாகாது. தற்போது ஏற்படுகின்ற ஒரு தலைக்காதல் கொலைகளுக்கும் அதுதான் காரணம். பாலியல் பலாத்காரங்களுக்கும் கொலைகளுக்கும் அதுதான் காரணம்.

            காதல் என்பது தெய்வீகமானது. ஒரு ஆண் பெண்ணிடமும் ஒரு பெண் ஆணிடமும் தன்னைச் சமர்ப்பணம் செய்வது. அப்போது அங்கே ‘நான்” அழிந்து காதல் தோன்றுகிறது. அந்தக் காதல் பேதங்கள் அற்றது. இந்நிலையில் ஒரு பெண்ணிடம் தன்னைச் சமர்ப்பணம் செய்த ஆண் எப்படி அவளைக் கொல்ல முடியும். ஒரு போதும் முடியாது. அந்தப் பெண் விரும்புகிறளா என்பது முக்கியமல்ல. ஆனால் அவன் அவளிடம் தன்னை இழந்து விட்டான். இங்கே அவனே இல்லாத போது அவனால் எப்படி அவளைக் கொலை செய்ய முடியும். ஆதலால் காதல் என்பது அன்பு மாளிகைக்கு நுழைவாயில். ஆண்டவத் தன்மைக்கு அஸ்திவாரம் இப்படியிருக்க கொலையா? நினைத்துக்கூட பார்க்கவியலாதது.

            அங்கே காதல் இல்லை. உள்ளமுக்கப்பட்ட காமம் தான் இருக்கிறது. உள்ளமுக்கப்பட்ட காமம் கொலை செய்ய வைக்கிறது. இது உள்ளமுக்கப்பட்ட காமத்தால் ஏற்படும் நோய். ஆகவே இந்தக் கொலைகளை ஒரு தலைக்காதல் கொலைகள் என்று கூறி காதலைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

            இப்போது என்ன செய்வது? ஒரு சாரார் „கை பழக்கம்… (MASTURBATION) செய்யலாம் என்கிறார்கள். கை பழக்கம் செய்வதால் பிரச்சனைக்கு தீர்வாகாது. அதுவே நோய்களுக்கு காரணமாகிறது. கை பழக்கம் செய்வதால் கீழ்கண்ட பின் விளைவுகள் வருகின்றன.

            பதட்டம், பயம், எரிச்சல் அடைதல், மற்றவர்களோடு பழகுவதில் சிரமம், எதிலும் கவனம் செலுத்த முடியாமை, மனக்குழப்பம், மறதி, ஞாபக சக்தி இழப்பு, சித்த பிரமை, மனச் சோர்வு, கீழ்படியாமை, புத்திமந்தம், பிறப்பு உறுப்பு சிந்தனையிலேயே இருத்தல், எப்போதும் நோய்வாய்ப்பட்ட நிலை, அறிவின்மை, மனநிலை பாதிப்பு, எதிலும் அக்கறையற்று இருத்தல், சிடுசிடுப்பு, மூர்க்கமான பிடிவாதம், பைத்திய நிலை, கோபம், நாணம் இன்மை, எப்போதும் காம உணர்வோடு இருத்தல், இது போன்ற பல மனக்கோளாறுகள் தோன்றக் காரணமாகும். இது தவிர உடல் கூறு வகையில் பல நோய்கள் வருகின்றன.

            கண் பார்வை கோளாறு, இரட்டையாகத் தெரிதல், பார்வை பலகீனம், ஜீரணக் கோளாறு, படபடப்பு, சுக்கிலச் சுரப்பிகள் வீக்கம், ஆண்மைக் குறைவு, இயலாமை, சீக்கிரம் விந்து கழிதல், பாலுறவு உணர்வு அதிகம் இருந்தும் செயல்பட முடியாமை, திருமண வாழ்க்கை லாயக்கற்ற தன்மை, பக்கவாதம், வலிப்பு முதலிய பாதிப்புகள் தோன்றும்

            இது பல சமூக சீர்கேடுகளுக்கு காரணமாகும். தற்போது பல இளம் தம்பதிகள், தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாதவர்களாக ஆகிறார்கள். அந்தப் பெண் கணவனின் இயலாமையால் ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறாள். இதை வெளியேயும் சொல்ல முடியாமல், உள்ளேயும் வைக்க முடியாமல் கடும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். அந்த ஆண் தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாவிட்டாலும் தன்னுடைய காமஇச்சைக்கு அந்த பெண்ணை பல்வேறு வகையில் இம்சிக்கிறான். இந்த வன்முறையைத் தாங்கவியலாமல் அந்தப் பெண் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறகிறாள். ஆனால் இந்தச் சமூகம் அவர்களை விட்டு விடுவதில்லை. அவர்கள் துன்புறுத்தி கொலைக்கோ, தற்கொலைக்கோ இட்டு செல்கிறது.

            இன்று இவ்வாறான தம்பதிகள் சமூகத்தில் 60% பேர் உள்ளார்கள். வேறு வழியின்றி வாழ்ந்து அழிகிறார்கள். இந்த அவலம் ஏன்? இதற்கு காரணம் பாலுறவு உணர்வு உள்ளமுக்கமும், கைபழக்கம் போன்ற செயல்களும், இந்த சமூகத்தில் நிலவி வரும் ஒரு தலைப்பட்சமான சமூக நீதியும்தான் காரணம்.

      இதுவே பல விவாகரத்துகளுக்கு காரணமாகும். கூடா ஒழுக்கம், மனைவி மீது சந்தேகம், அதனால் கொலை இது போன்ற பல சமூகக்குற்றங்களுக்கு கை பழக்கம் காரணமாகும். இப்போது இது மிகவும் தெளிவாகிறது. தற்போது நிலவி வரும் பாலியல் வன்முறை பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் ஒருதலைக் காதல் கொலை முதலியவற்றிற்கு பாலுறவு உணர்ச்சி அடக்கப்படுதல் மற்றும் கை பழக்கம் ஆகியவைதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

            ஆகவே, இந்தப் பிரச்சனைக்கு தீர்வு சட்டத்தால் மட்டும் காண முடியாது. இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலோர் உழைக்காதவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் 16 வயதிலிருந்து 20 வயதுக்கு உட்பட்ட கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லது வசதி படைத்த வீட்டில் வளரும் பையன்கள் ஆகியோர்.

            இந்த பிரச்சனைக்குத் தீர்வு தான் என்ன? அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டம் சார்ந்தவர்கள் அனைவரும் யோசிக்க வேண்டிய பிரச்சனை. குற்றங்களுக்கு தண்டனைகளைக் கூட்டுவதால் மட்டும் தீர்வு காண முடியாது. இந்தக்குற்றங்களுக்கு அவன் மட்டும் காரணம் இல்லை. இந்தச்சமூகமும் தான் காரணம்.

            சமூக வாழ்க்கை என்பது விலங்கின வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது. உடல் இயக்கத்திற்கும், உடல் அமைப்புக்கும் சமூகத்ததைப் பற்றிய அக்கறையில்லை. அது அதுபாட்டுக்கு அதன் வேலையை செய்து கொண்டு இருக்கிறது. மேலும் தற்போதுள்ள சமூக வாழ்க்கை, உடல் இயக்கப் போக்கை துரிதபடுத்திப் பருவமடைதலை மிகவும் குறைந்த வயதில் ஏற்படுத்தக் காரணமாகிறது. தற்போது 10 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் பாலுறவு உணர்ச்சிக்கு ஆட்பட்டு கை பழக்கம் செய்யும் அளவிற்கு போய் விடுவதையும் காண முடிகிறது.

            இன்றையச் சமூக அமைப்பு முறை இவ்வாறான குற்றங்களுக்கு முதன்மைக் காரணம் என்றால் மிகை இல்லை. கூட்டுக்குழு சமூக அமைப்பில் இவ்வாறான குற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. எப்போது சமூகமானது உடைமைச் சமூகமாய் ஆகியதோ, அப்போதுதான் பெண் உடைமையாக்கப்பட்டு பண்பாட்டில் அவளுக்கென்று ஒரு தனி நீதி வகுக்கப்பட்டது. அவள் போக பொருளாக கருதப்பட்டு சொத்துடமைக்கு வாரிசுகளை உற்பத்தி பண்ணும் இயந்திரமாக்கப்பட்டாள். இந்நிலையில் தான் பெண் வரையறையற்ற பாலுறவு உணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டாள். இந்நிலையில்தான் மிருகங்களிலிருந்து வேறுபட்டு கருத்தரிக்க தகுதியில்லாத நிலையிலும் அந்தப் பெண்ணோடு கூடுவதற்கு ஆளானாள்.





            இப்போது ஆணுக்கும் சிக்கல், பெண்ணுக்கும் சிக்கல். ஒரு ஆண் 14 வயதிலிருந்து எப்போதும் உறவு வைத்துக் கொள்ள ஏதுவாகவே உள்ளான். இந்நிலையில் தன் மனைவியிடம் கருவுறும் காலத்தில் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை சாத்தியப்பாடு இல்லை. இந்நிலையில் என்ன செய்வது? பிற பெண்களை நாட வேண்டுமா? அப்படியென்றால் சமூக ஒழுங்கு கெடுமே‚

            ஒரு பெண் கருவுறும் காலத்தில் மட்டும் பாலுறவு உணர்வுக்கு ஆட்படாமல், எல்லாக் காலங்களிலும் பாலுறவு உணர்வுக்கு ஆட்பட்டவளாக ஆக்கப்பட்டுள்ளாள். அதாவது கருவுற்ற காலத்திலும், பாலூட்டும் காலத்திலும், மகப்பேறு காலத்திலும் கூட இவ்வாறு பாலுறவு உணர்ச்சிக்கு உட்படுத்தபடுகிறாள். இது விலங்களோடு ஒப்பீடு செய்யும் போது அநாகரீகமாக இருக்கிறது. இந்த நிலையை எப்படி நாகரீகமான நிலை என்று கூற முடியும்?

            ஓரினச் சேர்க்கை கூட இயற்கைக்கு முரணானது. இது எந்த விலங்குச் சமூகத்திடமும் இல்லை. இது ஏன் மனிதர்களிடம் மட்டும் இருக்கிறது? 14 வயதிலே பாலுறவுக்குத் தயாரான மனிதர்களுக்கு30 வயதில் வாய்ப்பளிக்கப்படுவதால், இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் உணர்வுகளுக்கு வடிகால் தேடும்போது, அங்கே சமூகம், ஒழுக்கம், அறநெறி என்ற பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. ஒரு ஆண், ஒரு பெண் விரும்பினாலும் அவளோடு கூடுவதற்கு இந்த சமூகம் அனுமதிப்பதில்லை. சமூக ஒழுங்கு அவர்களைத் தடுக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணோடு பேசுவதையே தவறாக எண்ணுகிறது. இந்நிலையில் எப்படி அவர்களால் அவர்களுடைய பாலுறவு உணர்ச்சிக்கு வடிகால் தேட முடியும். அப்போது வேறு வழியின்றி ஓரினச் சேர்க்கைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்பு இதுவே விருப்பமானதாக போய் விடுகிறது. ஆகையால் ஓரினச் சேர்க்கை கூட சமூகத்தால் திணிக்கப்பட்ட அவலம்தான் என்றால் மிகையாகாது. 

      ஆக இந்த சமூக அமைப்பும், ஒழுக்கமுறையும் இரு பாலருக்கும் பாலுறவை பொருத்த வரையில் பாதகமாக உள்ளது. இதைக்கணக்கில் எடுத்துப் பார்த்தால் குடும்ப முறையே கேள்விக்குறியாக இருக்கிறது. பிறகு என்னதான் செய்வது? பண்டைக்காலமுறைப்படி (COMMUNE) கூட்டுக்குழு வாழ்க்கையைத் தொடங்கலாமா? தனியுடமை இருக்கும் வரை அதற்கும் சாத்தியமே இல்லை.

            ஆரோவில் (பாண்டிச்சேரி) உள்ளது போல் கூட்டுச் சமூக வாழ்க்கை வாழ்வது. இங்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் சமூகத்தின் குழந்தைகளாகப் பார்ப்பது போன்ற கூட்டு வாழ்க்கை ஓரளவிற்கு தீர்வு தருகிறது.

      அனைத்துச் சமூக சீரழிவுகளுக்கும் பாலுறவு உணர்வை உள்ளமுக்குவது தான் காரணம் என்று கூறலாம். இதைச் சரிசெய்ய பாலுறவு உணர்வை சீர் செய்ய வேண்டும்.

            இதற்கு திருமண வயது வரம்பைத் தளர்த்துதல், ஏற்கனவே இருந்தது போல் இளமை மணத்தை அனுமதிப்பது. அவ்வாறு 16 லிருந்து 20 வயதுக்குள் திருமணம் நடக்கும் போது பாலுறவு உணர்வுக்கு வடிகால் ஏற்படும். அதே நேரத்தில் உள்ளமுக்கப்படுவதால் மனவிகாரங்கள் தவிர்க்கப்பட்டு அந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு முழுமையாக பணியில் அல்லது படிப்பிலே கவனம் செலுத்தப்படும். அவர்கள் மனத்தைச் சாந்தப்படுத்தி ஆக்கபூர்வமான வேலையில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே ஏற்படும்.

            ஆகவே இளமை மணம் அவசியம் என்பது சரியானதுதான். இது வேளாண் சமூகத்தில் மிகவும் பயனள்ளதாகவும் இருந்தது. அதே சமயம் தொழில்துறை சமூகத்தில் வருமானம் என்பது ஒரு பிரச்சனையாகி வாழ்க்கையைச் சிக்கலாக்கி விடும். இதற்கு தீர்வு கல்வி முறையில் மாற்றம், உழைப்போடு சேர்ந்த கல்வியை 16 வயதுக்கு மேல் புகுத்துவது மூலம் தவிர்க்கலாம்.

            மேலும், சமூகக் குற்றங்கள் செய்யும் பலர் உழைப்புச் சோம்பேறிகளும், பிறர் உழைப்பில் கொழுப்பவர்களும் தான் காரணமாக இருக்கிறார்கள். பாலுறவு உணர்வு ஆற்றலோடு தொடர்பு உள்ளது. ஒருவருடைய ஆற்றல் உழைப்புக்குக்காகச் செலவு செய்யும் போது பாலுறவு உணர்வு ஒழுங்குபடுத்தப்படுகிறது. பெரும்பாலும் நன்கு உழைப்பவர்கள் இது போன்ற பாலுறவு உணர்வு வக்கிரங்களில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் அவர்களுடைய ஆற்றல் முறைப்படுத்தப்படுகிறது.

            மேலும் கல்வி முறையானது அறநெறி சார்ந்ததாகவும், ‘பாலுறவு உணர்வு  உயிர்களுக்கு பொதுவானது ஆதலால் அசிங்கமானதோ, யோசிக்க கூடாததோ” என்ற கருத வேண்டியதில்லை. இதற்கும் நீதி நெறிக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்த்தப்பட வேண்டும். பாலுறவு உணர்வு என்பது இனப்பெருக்கம் சார்ந்தது. முழுக்க முழுக்க இன்பம் துய்ப்பது இல்லை என்பதை உணரச் செய்து, தேவையற்ற மனக் கிலேசங்களுக்கும் வெறிச்செயல்களுக்கும் ஆட்படாமல், வழிகாட்டுவதாகக் கல்வி முறை இருக்க வேண்டும். மேலும் பாலுறவு செயல்பாட்டுக்கும், மனித மாண்புக்கும் தொடர்பில்லை. மேலும் மனித மாண்பு என்பது இதற்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்துவதாக இக்கல்வி முறை அமைய வேண்டும்.

            மேலும் இயற்கையில் எந்த ஒன்று பயன்படுத்தப்படாமல் இருக்கின்றதோ அல்லது உரிய காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய நேரத்தில் பயன்படுத்தப் படவில்லையோ, அப்போது அந்த உறுப்பு உருமாற்றம் அடைகிறது. அந்த உருமாற்றம் அடைந்த உறுப்பால் நிச்சயமாக பின்பு முழுமையான செயல்பாட்டில் ஈடுபட முடியாது. அங்கே, அப்போது திருப்தியற்ற செயல்பாட்டில்தான் போய் முடியும்.

            எந்த ஒன்றில் திருப்தி இல்லையோ அந்த ஒன்றை மேலும் மேலும் செய்ய விழைவது இயற்கை சுபாவம். இதனால் 14 வயதிலிருந்து 80 வயது வரை பாலுறவு வேட்கையில் அலைய நேரிடுகிறது. அரைகுறை பாலுறவு வேட்கையில் ஒவ்வொன்றும் மேலும் வேட்கையைதான் ஏற்படுத்தும், அதனால்தான் மனிதர்கள் தங்களால் இயலாத போதும் பாலுறவு செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். அது கிடைக்காத போது வக்கிரமடைகிறார்கள்.

            ஆகவே, இந்த சமூக முறை, பாலுறவு வாழ்க்கையில் திருப்தியின்மையும், சலிப்பையும் ஏற்படுத்தி ஒரு வக்கிர சமூகமாக மாற காரணமாகிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் ஆதி சமூகம் போல் நான்காக பிரித்து மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டால் இதற்கு ஓரளவு தீர்வு ஏற்படும். தோராயமாக மனிதனின் வாழ்நாளானது 100 ஆண்டுகளாகக் கணக்கிட்டு முதல் 25 ஆண்டுகள் பிரம்மச்சரியம் 25 ஆண்டுகள் கிரஹஸ்தம் அடுத்த 25 ஆண்டுகள் வனப்பிரஸ்தம் கடைசி 25 ஆண்டுகள் சந்நியாசம் என்று பிரித்து வாழ்ந்தால் ஒரு சிறப்பான சமூகத்தை உருவாக்க முடியும்.

            முதல் 25 ஆண்டுகள் ஒரு மனிதன் முழுமையாக குருகுல வாழ்க்கையில் ஈடுபட்டு தன்னுடைய சக்தி முழுவதையும் பயிற்சிகளில் ஈடுபடுத்தி அறிவு, உழைப்பு, பண்பு மற்றும் அனைத்து கலைகளிலும் கல்வியிலும் தேர்ச்சி பெற்று முழு இளைஞனாக ஆக்கப்படுகிறான். அப்போது அவனுடைய ஆற்றல் முழுமையும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவதால் கிட்டத்தட்ட பாலுறவு வேட்கையில்லாத பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்கிறான்.

            இவ்வாழ்க்கை அவனை முழுமையான பாலுறவு வாழ்க்கைக்குத் தயார்படுத்தி அவனை குடும்ப வாழ்க்கைக்கு முழுத்தகுதியுள்ளவனாக ஆக்கி விடும். இப்போது அவன் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு சிறந்த கிரஹஸ்தனாக25 ஆண்டுகள் வாழ்கிறான். இப்போது பாலுறவு வாழ்க்கையில் முழு திருப்தியோடு வாழ்ந்ததால் அதில் நிறைவடைகிறான்.

            அதன் பிறகு தன் குடும்பத்தை தன் சந்ததிகளிடம் கொடுத்து விட்டு காட்டுக்குச் சென்று அறிவு தேடலில் ஈடுபட்டு 25 ஆண்டுகள் அலைகின்றான். தன்னுடைய 75 வயதில் அறிவு தேடலில் நிறைவடைந்து அதன் பிறகு 25 ஆண்டுகள் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து தவசியாகி இறைநிலையடைகிறான்.

            இவ்வாறு மனித வாழ்க்கை இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு பண்பட்ட சமூகம் உருவாகும். அங்கே வக்கிரம், பாலுறவு சம்மந்தமான இழிச்செயல் நடைபெறாது. இவ்வாறான சமூகத்தை மனிதர்கள், மனிதத்துவத்தோடு வாழும் பொதுவுடைமைச் சமூகத்தால் படைக்க முடியும்.

                             000


No comments:

Post a Comment