Monday 11 March 2019

நடுகல்

இதழ் வருவதே குதிரைக் கொம்பென்ற சூழலில் இலக்கிய இதழ்களில் புத்தக விமர்சனங்கள் என்ற பகுதி வரப்பெற்றோம் என்று புத்தக அட்டைகளை போட்டு விடுவதில் சுருங்கி விட்டது. புத்தகங்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புத்தகம் பேசுது இதழ் முடிந்த அளவு புத்தகம் பற்றியான குறிப்புகளோடு விமர்சனங்களையும் தன் இதழில் தக்க வைத்திருக்கிறது. எழுத்தாளருக்கு அனுப்பி அவரிடமிருந்து அலைபேசியில் பேசிப் பேசி விமர்சனத்தை வாங்கி விடும் முடிவில் இந்த முன்னேற்பாட்டை நடுகல் எடுக்கிறது. 4 மாதங்கள் கழித்து வரும் நடுகல் 5 இதழில் விமர்சனங்கள் பல இடம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள இந்தப் பணி இப்போதே துவங்குகிறது.
புத்தகவெளியீட்டாளர்கள் தங்கள் வெளியீடுகளில் சிறப்பு என்றும், கவனம் பெறாமல் ஏன் போனது? என்ற குழப்பத்தில் இருக்கலாம். 2018 லிருந்து வெளிவந்த புத்தகங்களை நடுகல் எடுத்துக் கொள்கிறது. வெளியீட்டு நிறுவனங்களும், தனி வெளியீட்டாளர்களும், சிறு வெளியீட்டாளர்களும் தங்கள் பிரதிகளில் இரண்டை நடுகல் முகவரிக்கு அனுப்பி உதவலாம். நாவல், சிறுகதை, கட்டுரை தொகுப்புகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. கவிதை புத்தகங்கள் வரவு அதிகமிருந்தால் அவற்றுள் முக்கியம் என நினைக்கும் புத்தகங்களுக்கு நிச்சயம் விமர்சனம் இதழில் பதியப்படும். மற்றபடி வரப்பெற்றோம் பகுதியை தவிர்க்க இயலாது தான்.
இந்தப்பணி சிறக்க ஏப்ரல் 10 திகதி வரை வரும் புத்தகங்கள் எடுத்துக் கொள்ளப்படும். (இது ஏமாற்று வேலை என்று மனதில் நூல் அளவேனும் நினைப்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்!)
செய்து பார்ப்போம்! செய்ய முயற்சிப்போம்!
(இதையும் சொல்லி விடலாம் என்றே :- தங்கள் வெளியீடுகள் சிலவற்றை பின் அட்டையில் வர்ணத்தில் வெளியிட ரூ. 3000 தொகை செலுத்தலாம். அட்டை உள்பக்கங்களில் வர்ணத்தில் ரூ. 2500 தொகையில் இடம்பெறலாம். கறுப்பு வெள்ளை உள் முழுப்பக்க அளவில் 1000 ரூபாயில் இடம்பெற வைக்கலாம்)
நூல் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டிய முகவரி :-
வா.மு.கோமு, நடுகல் இதழ், வாய்ப்பாடி (அஞ்) விசயமங்கலம் (வழி) அ.கு.எண். -638056. அலைபேச :- 9865442435.

No comments:

Post a Comment